Monday, September 24, 2012

திருநீறு, பூ அணிவதன் பயன்கள்





திருநீறு, சந்தனம் மற்றும் சிவப்பு வைப்பதில் ஒரு மருத்துவமும் ஒரு தத்துவமும் உண்டு. நாம் தலைக்குக் குளிக்கும் போது தலையில் நீர் கோர்த்து தலைவலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. திருநீறு அணிவதால் தலையில் உள்ள நீர் உறிஞ்சப் படுவதுடன் நமது முகத்துக்கு முன் உள்ள காற்றின் ஈரப்பதம் குறைக்கப்பட்டு சுவாசத்தால் ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான நோய் வருவது தடுக்கப்படுகிறது.



நெற்றிப்பொட்டில் சந்தனம் வைப்பதால் அதற்கு உட்புறமாக உள்ள பிட்யூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி நன்றாக செயல்பட ஏதுவாகிறது. இந்த பிட்யூட்டரி சுரப்பி தைராய்டு, தைமஸ், அட்ரினல் மற்றும் பாங்கிரியாஸ் ஆகிய நான்கு நாளமில்லாச் சுரப்பிகளை கட்டுப்படுத்தும் முக்கியமான சுரப்பியாகும். இது சந்தனத்தின் மூலம் தூண்டப்படுகிறது. கொஞ்சம் சந்தனத்தை கழுத்தில் பூசுவார்கள் இது தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளை நன்கு செயல்படத் தூண்டுகிறது.

சந்தனத்திற்கு மேலே சிவப்பு அணிகிறோம். இந்த சிவப்பின் மூலப்பொருள் மஞ்சள் ஆகும். மஞ்சள் மிக முக்கியமான கிருமி நாசினி. இதன் வாசனை நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கிருமிகளை விரட்டுகிறது.

கோவில்களில் துளசி, அரளி பூ, வில்வ இலை ஆகியவை கொடுப்பார்கள். அதை வாங்கி சிலர் காதில் வைத்துக்கொள்வார்கள். இது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கார்பனின் அளவைக் குறைத்து ஆக்ஜிசனை அதிகப்படுத்தி கிருமிகளையும் விரட்டுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அரளிச்செடியும், தாஜ்மகாலை சுற்றிலும் துளசிச் செடியும் காற்றில் உள்ள கார்பனைக் குறைப்பதற்காக நட்டியுள்ளதைக் காணலாம்.

நமது மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்க சுத்தமான இரத்தமே மூலப்பொருளாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்த நமது மூச்சுக்காற்றில் உள்ள சுத்தமான ஆக்ஜிசனே முக்கியமாகும். எனவே, மூச்சுக்காற்று சுத்தமாக திருநீறு, சிவப்பு, துளசி,அரளிப்பூ அணிந்தார்கள். இப்பச்சொல்லுங்க திருநீறு பொட்டு வைத்து காதுலெ பூ வைப்பவர் முட்டாளா? அவர்களைப் பார்த்து கேலி பேசுபவர்கள் முட்டாள்களா?

தத்துவம்
பழங்காலத்தில் இந்துக்கள் இறந்தால் சந்தனக் கட்டை வைத்து எரிப்பார்கள். சந்தனக்கட்டையோடு சேர்ந்து உடல் எரியும்போது சாம்பல் கீழே விழும் நெருப்பு (சிவப்பு) மேலே வீசும். இதை நினைவு படுத்தவே திருநீறு, சந்தனம், சிவப்பு வைக்கின்றனர். இறக்கப்போகிற உடலை வளர்ப்பதற்காக பிறர் பொருளை அபகரிக்கக் கூடாது. பிறரை துன்புறுதக் கூடாது என்பதை நினைவு படுத்துவதே இந்த தத்துவமாகும்.