Sunday, January 24, 2010

அந்த சில நிமிடத்தில்தான்



மின்சாரம் தடைபட்ட

அந்த சில நிமிடத்தில்தான்

அழகிய நிலா வானில்

அற்புதமாய் ஜொலிக்கக் கண்டேன்.

மண்வாசல் கட்டிலிலே

மல்லாந்து பார்த்திருந்த

சிறுவயது நட்சத்திரங்கள்

சிதறாமல் இருக்கக் கண்டேன்.

பாலகனாய் இருக்கக் கண்ட

பகட்டான மின்மினியின்

எத்தனாம் தலைமுறையோ

என் வீட்டு மரத்தில் இன்னும்...

சர்க்கரை பழத்தை திண்ண

சுற்றிவரும் வெளவாள் கூட்டம்

படபடத்துப் பறக்கும் பாங்கை

பார்த்து நான் வியந்தே நின்றேன்.

இயற்கையின் பாங்கை எல்லாம்

செயற்கைதான் மறைத்தனவோ !

வேசத்தை பூசும் மாந்தர்

நே(நெ)ச முகம் மறந்தே போனோம்.

3 comments:

ஈரோடு கதிர் said...

//நே(நெ)ச முகம்//

அட... அட...
அருமை

ஹேமா said...

அருமை அருமை மணி.நானும் இப்படியான சந்தர்ப்பங்களில் நினைத்ததுண்டு.மின்சார வெளிச்சத்தால் நிலவைக் கண்டு எவ்வளவோ காலமாச்சு !

தமிழ் உதயம் said...

இயற்கையை ரசிக்க மின்வெட்டு தேவைப் படுகிறது. காலத்தின் கோலத்தை என்ன வென்று சொல்வது.