Thursday, November 26, 2009

ஜோதிடம் உண்மையா?


அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்கிறார்களே அது உண்மையா? ஆம் உண்மைதான்.
அது எப்படி? இந்த பிரபஞ்சமோ மிகப்பரந்த பெரும் பரப்பு அதிலே எண்ணற்ற நட்சத்திரமும் சூரியக் குடும்பங்களும் இருக்கின்றன. அவ்வளவையும் பிண்டத்தில் (நமது உடலில் ) இருக்க முடியுமா?
முடியும்.

எவ்வாரென்று ஆராய்வோம். பொருட்கள் எல்லாமே அணுக்களின் கூட்டு என்பது தெரியும். அணுக்கள் சுற்றுவதால் ஏற்படும் காந்தம் பிரபஞ்சமெங்கும் வான்காந்தமாகவும், உடலில் ஜீவா காந்தமாகவும் உள்ளது. உதாரணத்திற்கு சந்திரனிலிருந்து ஒரு செய்தி அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். அவை நேரே பூமியை வந்தடைவதில்லை. அது பிரபஞ்ச காந்த அலைகளினூடே பிரபஞ்ச வெளியெங்கும் பரவுகிறது. அந்த சங்கேதத்தை உள்வாங்கி நமக்கு புரியுமாறு விளக்கும் கருவிமூலம் நாம் அந்த செய்தியை அறிகிறோம். ஆக அச்செய்தி பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுக்களிநூடேயும் ஊடுருவிச் செல்கிறது.

இதுபோலவேதான் ஒவ்வொரு பொருளிளிருந்தும், ஒவ்வொரு கோள்களிலிருந்தும் அதனதன் இரசாயன தன்மைக்கேற்பவும், ஒவ்வொரு ஜீவனிலிருந்தும் அதன் இரசாயன மற்றும் எண்ணத்தின் தன்மைகளுக்கேற்பவும் ஒரு அலை வீசிக்கொண்டே இருக்கிறது. அவை பிரபஞ்ச அணுக்களிநூடே பரவிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு இப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்கள், கோள்கள் மற்றும் ஜீவன்கள் அனைத்தின் தன்மைகளும் அனைத்து (ஒவ்வொரு) அணுக்களிலும் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது. அவ்வாறான அணுக்களின் கூட்டுத்தானே நமது உடல். எனவே அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது சரிதானே. (கீரை விதை அளவு உள்ள ஆல விதையில் ஆல மரத்தின் இல்லை, பூ, காய் விழுது போன்ற அனைத்து தன்மைகளும் பதிவாகி இருப்பதைப்போல
பெரிது சிறியதில் அடக்கமாக முடியும் )

ஜோதிடத்தில் கோள்களின் தாக்கம் பற்றி குறிப்பிடுவது, அந்த கோள்களின் இரசாயனத் தன்மையின் காந்த அலை நமக்கு ஒத்துக்கொள்ளுதலும் ஒவ்வாமையும் பற்றியே. அதற்கு பரிகாரமாக ஒரு சில கோவில்களுக்கு செல்லச்சொல்வதன் நோக்கம், அவிடத்தின் நிலம் மற்றும் நீரின் இரசாயனத் தன்மை நமது உடலின் இரசாயனத் தன்மையின் குறைபாடு / மிகுதியை சமப்படுத்தவே. ஆனால் 4000 பேர் குளிக்குமிடத்தில் 4,00,000 பேர் குளித்தால் நோய்தான் வரும். மூட நம்பிக்கையை தவிர்த்து விழிப்புடன் வாழுங்கள்.

4 comments:

அன்புடன் நான் said...

ஜோதிடத்தில் கோள்களின் தாக்கம் பற்றி குறிப்பிடுவது, அந்த கோள்களின் இரசாயனத் தன்மையின் காந்த அலை நமக்கு ஒத்துக்கொள்ளுதலும் ஒவ்வாமையும் பற்றியே. அதற்கு பரிகாரமாக ஒரு சில கோவில்களுக்கு செல்லச்சொல்வதன் நோக்கம், அவிடத்தின் நிலம் மற்றும் நீரின் இரசாயனத் தன்மை நமது உடலின் இரசாயனத் தன்மையின் குறைபாடு / மிகுதியை சமப்படுத்தவே. ஆனால் 4000 பேர் குளிக்குமிடத்தில் 4,00,000 பேர் குளித்தால் நோய்தான் வரும். மூட நம்பிக்கையை தவிர்த்து விழிப்புடன் வாழுங்கள்.//

சோதிடத்தில் நம்பிக்கையில்லாதவன்... த்ங்களின் இந்த கருத்தில் உடன் படுகிறேன்.

Sabarinathan Arthanari said...

நல்ல விளக்கங்கள்

நன்றி

ஹேமா said...

மணி,நான் ஜோதிடம் நம்புவதில்லை.என்றாலும் நீங்கள் விஞ்ஞானத்தையும் கலந்து சுட்டிக் காட்கிறீர்கள்.ம்ம்ம்...!

mirelasuresh said...

i am suresh rajendran. it really aplicable in educated basis.. i accept you in the mirror of science
thank u.