Monday, October 26, 2009

அம்மா



கருவாயிருக்கையில் எனை
கனவு கண்டவள்.
பிறக்காதிருக்குமுன்னே என்மேல்
பிரியம் கொண்டவள்.
என் நோய்க்கு விழித்திருந்து
வலி பொறுத்தவள் - என்
சாதனையில் சப்தமின்றி
கரைதிருப்பவள்.
சான்றோன் என கேட்க
காத்திருப்பவள்.
தனக்கென வாழாத
தகைமை கொண்டவள்.

Sunday, October 25, 2009

கங்கை காவிரியாள்

இன்றில்லை என்றாலும்
இரு நூறு ஆண்டாயின் ....
கடலில் வீணாக
கடந்தேகும் கங்கைதனை
காவிரி பெண்ணோடு
கை கோர்க்க செயல் வேண்டும்.
எனவே எழுதுங்கள் ...
எப்போதும் பேசுங்கள் ...
உங்கள் பேச்சே
உங்கள் எழுத்தே
விதையாகி வித்தாகி
விரைந்து செயலாகட்டும்
விளைந்து வளம் பெருகட்டும்.
இன்றில்லை என்றாலும்
இரு நூறு ஆண்டாயின் . . .

Wednesday, October 21, 2009

நாம் எங்கே போகிறோம்


இந்த குழந்தை கண்டு

இதயத்தில் ரத்தம் வடிகிறது

தாயில்லை தந்தையில்லை

தனக்குற்றோர் யாருமில்லை ...

அநாதை சிறுவனிடம்

அடைக்கலமாய் ஒரு குழந்தை !

விதியின் கதை தன்னை

விலா எலும்பு சொல்கிறது ...

மனித குலத்தின்

மகத்தான பொக்கிசங்கள் !

தெருவோர காடுகளில்

திக்கின்றி கிடப்பதுவோ

மனித குல வளர்ச்சிக்கு

மகத்தான உதாரணம் !

நேயத்தை கொன்றுவிட்டு

நீசராய் வாழுவதோ !

இதயமில்லா மனிதர்களை

இறைவன் படைத்தானோ ?


-இவன் வி.என்.தங்கமணி

உங்கள் கருத்தை தமிழில் தெரிவிக்க கீழ் உள்ள தளத்திற்கு சென்று டைப் செய்து
http://www.google.co.in/transliterate/indic/Tamil காப்பி செய்து கமன்ட்க்கான பகுதியில் பேஸ்ட் செய்யவும்

Tuesday, October 20, 2009

உழைப்பு


பூமியை புரட்டி போடும்
பூவையர் கூட்டம் இவர்கள்
மனித குலத்தின் பசிக்கு
மருந்து தேடும் மாதர்
இவர்க்கு யாரும் உண்டோ
இசைந்த பட்டம் கொடுக்க .

இடையும் தொடையும் காட்டி
அட்டை படத்தில் நிற்பர்
அரசும் புரசும் சேர்ந்து
பட்டம் சிலவும் கொடுப்பார் .

உழைக்கும் மனிதர் தம்மை
உலகோர் மதிததுண்டா
-இவன் வி. என்.தங்கமணி

Wednesday, October 14, 2009

இன்பத்தை தேடி

பச்சை புல்வெளிகள்
பரந்துயர்ந்த மரக்கூட்டம்
இனியமன மலர் செடிகள்
இசைஎளுப்பும் பறவைகளும்

தெள்ளியநல் நீரோடை
தெவிட்டாத கனிவகைகள்
எல்லாவும் சுகம் தரவே
இறைவன் படைத்துள்ளான்
மனிதர்கள் எப்போதும்
மன நிறைவு இல்லாமல்
எதையோ தேடி எங்கோ
எந்நாளும் ஓடுகிறார்
-இவன் V.N.Thangamani

Thursday, October 8, 2009

இருக்க நினைத்தது

இருக்க நினைத்ததென்னவோ
இப்படித்தான் கண்ணே - ஆனால்
மறக்க நினைத்தாலும்
முடியவில்லை உன்னை .

Tuesday, October 6, 2009

சுவடுகள்


எல்லாமே நீயென்று இருக்கையிலே
இழப்பதற்கு ஏதுமுண்டோ என்னிடத்தே
நீயின்றி எதுஎனக்கு பெரிதாய் ஆகும் .
நிலுலகில் உனக்குநிகர் நீயேஆகும் .
இதோ இந்த வன்னப்பாதயில்தான்
உன் பாதச்சுவடுகளை தேடிக்கொண்டிருக்கிறேன் .
நீ எனைத்தேடி வராவிட்டாலும்
உன் சுவடுகலேனும் என்னிடத்து மிஞ்சுமோ ...
- ivan VN.Thangamani

Monday, October 5, 2009

நெஞ்சம் மறப்பதில்லை


நிலா வானத்தில் நின்றிருந்த போதெல்லாம்
உள்ளம் கேட்கிறது எங்கே அவளென்று .
தண்ணீர் குளத்தில் அலையடிக்கும் போதெல்லாம்
எண்ணம் நினைக்கிறது என்னவள் நீயென்று .
சொன்னால் கேட்பாயோ சுகமாய் ஒருவார்த்தை
எந்நேரம் உன்நினைவு உயிரையே கொல்லுதடி
எனக்குள்ளே என்ன வைத்தாய் எனக்கே தெரியாமல்
கணநேரம் மறப்பதுவும் அகாதுபோனத்டி
-இவன் வி.என் . தங்கமணி